/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசாள வந்த அம்மன் கோயில் விழா துவக்கம்
/
அரசாள வந்த அம்மன் கோயில் விழா துவக்கம்
ADDED : ஜூலை 22, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குடம் மற்றும் பூச்சொரிதல் விழா ஜூலை 29ல் நடக்கிறது. நேற்று கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் செய்யப்பட்டு காப்பு கட்டுதல் நடைபெற்றது.
மூலவர்கள் அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு 18 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஜூலை 25 ல் திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஜூலை 29 ல் முக்கிய விழாவான பால்குடம், பூச்சொரிதல் விழா நடைபெற்று விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை ஹிந்து சமய மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.