/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் துாக்கு பாலத்தை மிதவை கப்பல் கடந்தது
/
பாம்பன் துாக்கு பாலத்தை மிதவை கப்பல் கடந்தது
ADDED : மார் 11, 2024 11:23 PM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை 12 நாள்களுக்குப் பின் மிதவை கப்பல் கடந்து விசாகப்பட்டினம் சென்றது.
பிப்.28ல் கோவா துறைமுகத்தில் இருந்து பாம்பன் வந்த மிதவை கப்பல் ரயில் பாலத்தை கடந்த போது கடலில் கிடந்த விசைப்படகின் நங்கூரக் கயிறு கப்பல் இஞ்சின் இலையில்(புரபல்லர்) சுற்றியதால் தொடர்ந்து இயக்க முடியாமல் கப்பலை நிறுத்தினர்.
இந்நிலையில் இலையில் சுற்றிய கயிற்றை அகற்றிய நிலையில் ரயில் பாலம் திறப்பதற்காக கப்பல் கேப்டன், மாலுமிகள் 12 நாள்களாக பாம்பன் கடற்கரையில் காத்திருந்தனர். நேற்று மாலை 5:00 மணிக்கு ரயில் பாலம் திறந்ததும் மிதவை கப்பல் பாலத்தை கடந்து சென்றது.
இதனைத் தொடர்ந்து மன்னார் வளைகுடா கடலில் ரோந்து சுற்றிய மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் பாலத்தை கடந்து பாக்ஜலசந்தி கடல் பகுதிக்கு சென்றது. மேலும் மாலத்தீவில் இருந்து புறப்பட்ட பாய்மர படகுகள் பாலத்தை கடந்து கடலுார் துறைமுகம் சென்றன.

