/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இருள் சூழ்ந்து காணப்படும் கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரை சாலை
/
இருள் சூழ்ந்து காணப்படும் கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரை சாலை
இருள் சூழ்ந்து காணப்படும் கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரை சாலை
இருள் சூழ்ந்து காணப்படும் கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரை சாலை
ADDED : ஜன 29, 2024 05:17 AM
கீழக்கரை: -கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட 14--வது வார்டு மன்னார் வளைகுடா கடற்கரை சாலையில் ஆறு மாதங்களாக தெரு விளக்கு எரியாத நிலை உள்ளது.
கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரை சாலையில் 10 மின்கம்பங்கள் உள்ளன.
அவற்றில் எவ்வித எல்.இ.டி., பல்புகளும் எரியாமல் உள்ளதால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அலைபேசி வெளிச்சத்தில் கடந்து செல்கின்றனர்.
விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வாக்கிங் செல்வதற்கு ஏற்ற இடமாக இருப்பதால் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களின் நலன் கருதி கடற்கரை சாலையில் மின் விளக்குகளை ஒளிரச் செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.