/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கால்வாய்க்குள் விழுந்த நுாறு ரூபாய் எடுத்தவர் கை துளைக்குள் சிக்கியது

ADDED : ஜூலை 02, 2025 07:52 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் கால்வாய்க்குள் விழுந்த நுாறு ரூபாயை எடுக்க முயன்றவரின் கை துளைக்குள் சிக்கியதால் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
ராமநாதபுரம் கூட்டாம்புளி பகுதியை சேர்ந்தவர் ஆசை 45. மாற்றுத்திறனாளியான இவர்ரயில் நிலையம் அருகில்நேற்று மாலை வந்த போதுதனது பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்துள்ளார்.
அப்போதுதவறி விழுந்த நுாறு ரூபாய் ரயில் நிலையத்தில் புதிய கட்டுமான பணிகள் நடந்து வரும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் சிலாப்புகளில் உள்ள துளைக்குள் விழுந்தது.
இதனை எடுப்பதற்காக ஆசை தனது வலது கையை துளைக்குள் விட்டு முயற்சித்துள்ளார். முழங்கை வரை துளைக்குள் சென்று சிக்கி கொண்டது. தனது கையை வெளியே எடுக்க முடியாமல் தவித்துள்ளார். அக்கம் பக்கத்தினர், போலீசார் ராமநாதபுரம் தீயணைப்புத்துறைக்கு தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கான்கிரீட் சிலாப்பை இயந்திரங்கள் மூலம் உடைத்து காயமின்றி விடுவித்தனர். இதையடுத்து அங்கிருந்த மக்கள் தீயணைப்பு வீரர்களைபாராட்டினர்.