/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விளம்பரம் செய்யும் இடமாக மாறியது சுகாதார வளாகம்
/
விளம்பரம் செய்யும் இடமாக மாறியது சுகாதார வளாகம்
ADDED : மே 07, 2025 01:51 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழக்கன்னிச்சேரி கிராமத்தில் உள்ள சுகாதார வளாகம் பயன்பாடின்றி இருப்பதால் விளம்பரம் செய்யும் இடமாக மாறி வருகிறது.
முதுகுளத்துார் அருகே கீழக்கன்னிசேரி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. பின்பு முறையாக மராமரிப்பு செய்யப்படாதால் தற்போது விரிசல் ஏற்பட்டு பயன்பாடின்றி உள்ளது.
இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. தற்போது கட்டடம் பயன்பாடின்றி இருப்பதால் மக்கள் போஸ்டர் ஒட்டவும், சுவர் விளம்பரம் செய்யும் இடமாக மாற்றியுள்ளனர். இதே போன்று முதுகுளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு அரசு கட்டடத்தின் சுவர், பயன்பாடின்றி உள்ள கட்டடங்களில் விளம்பரம் செய்யும் இடமாக மாற்றி வருகின்றனர்.
எனவே சுகாதார வளாகத்தை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.இதே போன்று அரசு சுவர் மற்றும் கட்டடங்களில் விளம்பரம் செய்வதை தடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.