/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜல்ஜீவன் திட்டத்தில் முழுமை பெறாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பரமக்குடி, நயினார்கோவில், போகலுார் மக்கள் ஏக்கம்

ADDED : ஏப் 10, 2025 05:41 AM

பரமக்குடி: பரமக்குடி, நயினார்கோவில், போகலுார் பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி முடிக்கப்படாத நிலையில் மக்கள் குடிநீருக்காக ஏங்குகின்றனர்.
கிராமங்கள் தோறும் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீரை சென்று சேர்க்கும் வகையில் மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு ஊராட்சிகளுக்கு உட்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படுகிறது.
வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் வகையில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதன்படி பரமக்குடி, போகலுார், நயினார்கோவில் ஒன்றியங்களுக்கு உட்பட்ட சில கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அங்கு 10, 20 ஆயிரம் லி., கொள்ளளவு கொண்ட 100 அடி உயரம் வரை உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகிறது. பணிகள் துவங்கி ஓராண்டுகளை கடந்தும் திட்டம் முழுமை பெறாமல் கிடப்பில் உள்ளது.
இப்பணிகள் ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் பிரதிநிதிகள் இருந்த போது துவக்கப்பட்டவையாக உள்ளது. தற்போது டெண்டர் எடுத்தவர்கள் பணிகளை ஏன் முடிக்காமல் உள்ளனர் என கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் உடனடியாக ஜல் ஜீவன் திட்டம் முழுமை பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.