/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்வெட்டில் நகராட்சியை ஊராட்சி ஆக்கிய புதுமை
/
கல்வெட்டில் நகராட்சியை ஊராட்சி ஆக்கிய புதுமை
ADDED : ஜன 25, 2024 04:58 AM

கீழக்கரை; -கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனை வளாகத்தில் மழை காலங்களில் சேறும் சகதியுமாக இருந்ததால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் சிரமப்பட்டனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சமீபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. காதர் பாட்ஷா எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பெரிய கல்வெட்டு அமைக்கப்பட்டது.
அதில் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை ஊராட்சி ஒன்றியம், கீழக்கரை ஊராட்சி திட்டம் எம்.எல்.ஏ., சி.டி.எஸ் 2022 --2023 என குறிப்பிடப்பட்டு வேலையின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
கீழக்கரை நகராட்சி மற்றும் திருப்புல்லாணி ஒன்றியம் என்பதே சரியானது. இவற்றில் தவறாக கீழக்கரை ஊராட்சி, கீழக்கரை ஊராட்சி ஒன்றியம் என பொறிக்கப்பட்டு அதனை கல்வெட்டாக அனைவரின் பார்வையில் படும்படி வைத்திருந்தனர்.
இதேபோல் கீழக்கரை அரசு மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு பிளான்ட் ரூ.8 லட்சத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அதிலும் இதே போன்ற தவறை பிளக்ஸ் போர்டு ஆக வைத்திருந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் நேற்று காலை சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். எப்போது கீழக்கரையை ஊராட்சியாக மாற்றினர் என பல்வேறு வினாக்களை தொடுத்தனர். இதன் எதிரொலியாக உடனடியாக ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டது.