/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடிதம் எழுதிய இன்ஸ்பெக்டர் காத்திருப்புக்கு மாற்றம்
/
கடிதம் எழுதிய இன்ஸ்பெக்டர் காத்திருப்புக்கு மாற்றம்
கடிதம் எழுதிய இன்ஸ்பெக்டர் காத்திருப்புக்கு மாற்றம்
கடிதம் எழுதிய இன்ஸ்பெக்டர் காத்திருப்புக்கு மாற்றம்
ADDED : ஜன 18, 2025 12:08 AM

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சரவணன்.
தன் அதிகாரத்தில் டி.எஸ்.பி., முகாம் அலுவலக எழுத்தர் மற்றும் மேல் அதிகாரிகள் தலையீடு அதிகம் உள்ளதாகவும், ஆர்.எஸ்.மங்கலம் ஸ்டேஷன் போலீசாருக்கு தன்னை கேட்காமலே தன்னிச்சையாக வேறு பணிகள் வழங்கப்பட்டு வருவதால், சட்டம் -- ஒழுங்கு அமைதியை நிலைநாட்ட முடியவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
பல்வேறு நிலுவையில் உள்ள வழக்குகள் தேக்கமடைகின்றன. இதனால், சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்களில் தொடர்ந்து பணியாற்ற விருப்பமில்லை எனக்கூறி, உள்துறை செயலருக்கு, சில நாட்களுக்கு முன் புகார் கடிதம் அனுப்பினார். அந்த கடிதம் வலைதளங்களில் பரவியது.
இது, போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், துறை ரீதியான நடவடிக்கையாக சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, ராமநாதபுரம் டி.ஐ.ஜி., அபினவ்குமார் உத்தரவிட்டுள்ளார்.