/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் ரூ.4 கோடியில் கட்டிய தொழிலாளர் நல அலுவலகம் காத்திருப்பு

ADDED : அக் 12, 2024 04:21 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரூ.4 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது.
ராமநாதபுரம் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கான புதிய கட்டடம் பட்டணம்காத்தான் ஊராட்சி அலுவலகம் அருகே ரூ.4 கோடியில் கட்டப்பட்டு ஓராண்டாக திறக்கப்படாமல் உள்ளது. பொதுப்பணித்துறையினர் கட்டடத்தை ஒப்படைக்கப்படாமல் உள்ளனர்.
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுமான பணிகளை முடித்தாலும் தொழிலாளர் நலத்துறையினர் தொகையை வழங்கிய பிறகே பொதுப்பணித்துறையினர் தொழிலாளர் நலத்துறையினரிடம் ஒப்படைப்பார்கள். இதில் ஏற்பட்ட தாமதத்தால் புதிய கட்டடம் கட்டப்பட்டும் திறக்கப்படாமல் உள்ளது என்றனர்.
அரசும், தொழிலாளர் நலத்துறையினரும் நடவடிக்கை எடுத்து புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கும் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் கூரை பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது.
பழைய கட்டடம் என்பதால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பணி செய்கின்றனர். புதிய கட்டடத்திற்கு தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.