/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கையில் ஆண்டிற்கு ஆறு முறை நடக்கும் மகா அபிஷேகம் காலங்களை கணக்கிட்டு நடக்கிறது

ADDED : ஏப் 23, 2025 05:40 AM
உத்தரகோசமங்கை : - உத்தரகோசமங்கை மங்கள நாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் காலங்களை கணக்கிட்டு ஆண்டிற்கு ஆறு முறை மகா அபிேஷகம் நடக்கிறது.
இங்குள்ள மரகத நடராஜர் சன்னதி முன்புள்ள உற்ஸவ மூர்த்தியான நடராஜர் சமேத சிவகாமி அம்மனுக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபராதனைகள் நடக்கிறது. சித்திரை மாத ஓணம், ஆனி மாதத்தில் வரும் உத்திரம், மார்கழியில் வரும் திருவாதிரை ஆகிய மூன்று நட்சத்திரத்திலும் மற்றும் ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மாதங்களில் வரக்கூடிய சதுர்த்தசி திதியிலும் மகா அபிஷேகம் நடக்கிறது.
சித்திரை ஓணம் நட்சத்திரத்தை முன்னிட்டு உற்ஸவ மூர்த்தியான நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் மாலை 5:00 முதல் இரவு 7:00 மணிக்குள் நிறைவேற்றப்பட்டு உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது.
ஆண்டை 6 பருவங்களாக கணக்கிடப்பட்டு கார்காலம் (ஆடி ஆவணி), குளிர் காலம் (கார்த்திகை, மார்கழி) முன்பனிக்காலம் (தை, மாசி), பின் பனிக்காலம் (பங்குனி, சித்திரை) இளவேனிற் காலம் (பங்குனி, சித்திரை) முதுவேனிற் காலம் (வைகாசி, ஆனி) உள்ளிட்ட மாதங்களாகும்.
அபூர்வ பச்சை மரகத நடராஜருக்கு மட்டும் ஆண்டிற்கு ஒரு நாள் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று சந்தனம் படி களையப்பட்டு அருணோதய காலத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.