/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் தலைமை அஞ்சலக ரோடு மூன்று மாதங்களாக சேதம்
/
பரமக்குடியில் தலைமை அஞ்சலக ரோடு மூன்று மாதங்களாக சேதம்
பரமக்குடியில் தலைமை அஞ்சலக ரோடு மூன்று மாதங்களாக சேதம்
பரமக்குடியில் தலைமை அஞ்சலக ரோடு மூன்று மாதங்களாக சேதம்
ADDED : அக் 29, 2024 04:56 AM
பரமக்குடி: பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதி தலைமை அஞ்சலகம் ரோடு மூன்று மாதத்திற்கும் மேலாக சேதமடைந்த நிலையில் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்படுகின்றனர்.
பரமக்குடி ஆற்றுப்பாலம் துவங்கி தலைமை அஞ்சலகம் ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் போலீஸ் ஸ்டேஷன் வரை கடந்த மூன்று மாதத்திற்கு முன் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. அப்போது தோண்டப்பட்ட ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளது.
இந்த ரோட்டில் தலைமை அஞ்சலகம் உட்பட வங்கிகள், தனியார்மகப்பேறு மருத்துவமனைகள், அரசுப் பள்ளி, போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. ஆற்றுப்பாலத்தில் இருந்து ஐந்து முனை ரோடு செல்ல இந்த பகுதி பிரதானமாக விளங்குகிறது.
தினமும் ஏராளமானோர் இந்த ரோட்டில் செல்லும்நிலையில் தடுமாறி செல்கின்றனர். பள்ளி மாணவர்கள்,பென்ஷன் வாங்கும் முதியவர்கள் செல்லும் நிலையில் அச்சத்துடன் பயணிக்கும் சூழல் உள்ளது. ஆகவே அதிகாரிகள் உடனடியாக ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

