/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.2.75 கோடி தங்க கட்டிகள் கடத்தியவர் கைது
/
ரூ.2.75 கோடி தங்க கட்டிகள் கடத்தியவர் கைது
ADDED : பிப் 04, 2024 02:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்,: ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் அருகே திருச்சி சுங்க புலனாய்வு துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, டூ - வீலரில் வந்த ஒருவரை மடக்கி சோதனையிட்டனர்.
அவரிடம், 4.364 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. விசாரணையில் அவர், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நம்புராஜன், 40, என, தெரிய வந்தது. மேலும், இந்த தங்கக் கட்டிகளை இலங்கையில் இருந்து கடத்தி வந்துள்ளார்.
இதன் மதிப்பு, 2.75 கோடி ரூபாய். நம்புராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.