/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வங்கியில் நாள் முழுவதும் காத்திருக்கும் அவலம்
/
வங்கியில் நாள் முழுவதும் காத்திருக்கும் அவலம்
ADDED : ஜூலை 18, 2025 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வழிவிடு முருகன் கோயில் அருகே கனரா வங்கி செயல்பட்டு வருகிறது.இங்கு பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர்.
இங்கு தினந்தோறும் நகை வைப்பது, திருப்புவது, பணம் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மக்கள் வந்து செல்கின்றனர். தற்போது கனரா வங்கிக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் ஒரு நாள் முழுவதும் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. மக்கள் அதிகமாக வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
எனவே மக்களின் நலன் கருதி வங்கியில் கூடுதல் கவுன்டர்கள் அமைத்து பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.