/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எண்ணும் எழுத்தும் பாடத்தில் இருந்து அதிகளவில் கேட்கப்படும் வினாக்கள் பாடப்புத்தகம் எதற்கு என பெற்றோர் கொதிப்பு

ADDED : செப் 26, 2024 04:38 AM
ராமநாதபுரம்: ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் வழங்கப்படும் எண்ணும் எழுத்தும் பாடங்களில் இருந்து தேர்வுகளில் அதிக வினாக்கள் கேட்கப்படுவதால் மாணவர்களுக்கு தனியாக பாடப்புத்தங்கள் வழங்குவது ஏன் என பெற்றோர் கொதிக்கின்றனர்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடக்க நிலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் சார்பில் எண்ணும் எழுத்தும் திட்ட பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. முதல்வரின் கனவு திட்டமான இதிலிருந்து தான் தேர்வுகளில் 90 சதவீதம் வினாக்கள் கேட்கப்பட்டு வருகிறது.
பாடப்புத்தகங்களில் இருந்து 10 சதவீதம் பொது வினாக்கள் மட்டுமே கேட்கப்படுகிறது.
அதிக வினாக்கள் இடம் பெறாத நிலையில் தேவையின்றி பாடப்புத்தகங்களை சுமக்க வைக்கின்றனர் என பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இனியாவது பள்ளிக்கல்வித்துறை குழப்பம் இல்லாமல் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.