sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரத்தில் அனுமதியின்றி 2800 நாட்டுப்படகுகள் இயக்கம் நாட்டின் கடல் வழி பாதுகாப்பு கேள்விக்குறி

/

ராமநாதபுரத்தில் அனுமதியின்றி 2800 நாட்டுப்படகுகள் இயக்கம் நாட்டின் கடல் வழி பாதுகாப்பு கேள்விக்குறி

ராமநாதபுரத்தில் அனுமதியின்றி 2800 நாட்டுப்படகுகள் இயக்கம் நாட்டின் கடல் வழி பாதுகாப்பு கேள்விக்குறி

ராமநாதபுரத்தில் அனுமதியின்றி 2800 நாட்டுப்படகுகள் இயக்கம் நாட்டின் கடல் வழி பாதுகாப்பு கேள்விக்குறி


ADDED : செப் 21, 2024 12:43 AM

Google News

ADDED : செப் 21, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டத்தில் 2800 நாட்டுப்படகுகள் பதிவு செய்யப்படாமல் அனுமதியின்றி மீன் பிடி தொழில் செய்வதால் நாட்டின் கடல் வழி பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

மாவட்டத்தில் 6200 நாட்டுப்படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 3400 படகுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு உரிய அனுமதியுடன் மீன்பிடி தொழில் செய்கின்றனர். பதிவு செய்யப்படாத 2800 படகுகளிலும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.

பதிவு செய்யாத மீன்பிடி படகுகள் அரசின் சலுகைகளை பெற முடியாது. விபத்திற்குள்ளாகும் போதோ, இலங்கையில் பிடிபடும் போதோ அந்த படகுகளுக்கு எந்த இழப்பீடும் கிடைக்காது.

பதிவு செய்யப்படாத படகுகளால் நாட்டின் கடல் வழிப்பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.இப்படகுகளை பயன்படுத்தி பயங்கரவாதிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. மீன் வளத்துறையினர் நாட்டுப்படகுகளை பதிவு செய்ய மிக எளிமையான திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.

இதன்படி படகுகளை பதிவு செய்யும் போது படகு வடிவமைத்ததற்கான சான்று, மோட்டார் இயந்திரத்தின் பில், உட்பட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது புதிய திட்டத்தின் படி, படகு வைத்திருப்பவர் தான் குடியிருக்கும் பகுதி ஊராட்சி நிர்வாகத்திடம் சான்று பெற்றால் போதுமானது.ஆதார் கார்டு கொடுத்தால் உடனடியாக பதிவு செய்யப்படும்.

படகுக்கு பதிவெண் வழங்க ரூ.2000, மீன் பிடி அனுமதிக்கு ரூ.1500, இதர ஆவணங்கள் தயாரிப்பதற்கு ரூ.500 என ரூ.4000 கட்டினால்மீன் பிடி படகுகள் பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்படாத படகுகள் பறிமுதல் செய்யப்படும் என மீன் வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us