/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் நாய்களை அப்புறப்படுத்திய பேரூராட்சி
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் நாய்களை அப்புறப்படுத்திய பேரூராட்சி
ஆர்.எஸ்.மங்கலத்தில் நாய்களை அப்புறப்படுத்திய பேரூராட்சி
ஆர்.எஸ்.மங்கலத்தில் நாய்களை அப்புறப்படுத்திய பேரூராட்சி
ADDED : ஜன 29, 2025 06:25 AM
ஆர்.எஸ்.மங்கலம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதியில் தெரு நாய்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
இங்கு தெரு நாய்கள் அதிகரிப்பால் கால்நடைகளும், சிறுவர்களும் பாதிக்கப்பட்டனர். தெரு நாய்கள் தொல்லையால் பள்ளி செல்லும் குழந்தைகளும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுவது குறித்து தினமலர் நாளிதழில் சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் தெருக்களில் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிந்த தெரு நாய்களை உயிருடன் பிடித்து வெளி மாவட்ட காட்டுப்பகுதிக்குள் விடுவதற்காக கொண்டு சென்றனர்.
டவுன் பகுதியில் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.