/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவகோட்டையில் மாயமான மூதாட்டி உடல் திருவாடானை கண்மாயில் மீட்பு
/
தேவகோட்டையில் மாயமான மூதாட்டி உடல் திருவாடானை கண்மாயில் மீட்பு
தேவகோட்டையில் மாயமான மூதாட்டி உடல் திருவாடானை கண்மாயில் மீட்பு
தேவகோட்டையில் மாயமான மூதாட்டி உடல் திருவாடானை கண்மாயில் மீட்பு
ADDED : பிப் 09, 2025 04:56 AM
திருவாடானை: தேவகோட்டை அருகே தேவதண்டதாவு கிராமத்தில் மாயமான மூதாட்டி திருவாடானை அருகே கட்டவிளாகம் கண்மாயில் இறந்து கிடந்தார்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தேவதண்டதாவு கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பம் 72. வீட்டிலிருந்த இவர் பிப்.3ல் மாயமானார்.
உறவினர்கள் புகாரில் தேவகோட்டை தாலுகா போலீசார் அவரை தேடி வந்தனர்.
நேற்று காலை திருவாடானை அருகே கட்டவிளாகம் கண்மாய்க்குள் புஷ்பம் இறந்து கிடந்தார்
அந்தப்பக்கமாக சென்றவர்கள் போலீசுக்கு தெரிவித்தனர். திருவாடானை போலீசார் விசாரித்தனர். போலீசார் கூறுகையில், புஷ்பத்திற்கு சொந்தமான வயல்கள் கட்டவிளாகத்தில் உள்ளது. அந்த நிலங்களை புஷ்பம் வந்து பார்த்துக் கொண்டிருந்த போது தவறி வயலில் விழுந்துள்ளார்.
நீர்பிடிப்பு பகுதியாக இருந்ததால் மூச்சு திணறி இறந்தார். அவரது உடல் நீரோட்டத்தில் கண்மாய்க்குள் சென்றது. உடல் மீட்கப்பட்டு தேவகோட்டை தாலுகா போலீசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.