/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய உரக்குழி கிடங்கில் தேங்கும் நீரால் துர்நாற்றம்
/
புதிய உரக்குழி கிடங்கில் தேங்கும் நீரால் துர்நாற்றம்
புதிய உரக்குழி கிடங்கில் தேங்கும் நீரால் துர்நாற்றம்
புதிய உரக்குழி கிடங்கில் தேங்கும் நீரால் துர்நாற்றம்
ADDED : ஜன 20, 2025 05:08 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே கட்டையன் பேரன் வளைவு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உரக்குழி கிடங்குகளில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நீரை வெளியேற்றி சுத்தம் செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
தினைக்குளம் ஊராட்சியில் உள்ள கட்டையன் பேரன் வளைவு கிராமத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு உரக்குழி கிடங்கு கட்டப்பட்டுள்ளது. கிராமத்தில் சேகரிக்க கூடிய மக்கும் குப்பை, மக்கா குப்பையை தனியாக பிரிக்கவும் யூனியன் நிர்வாகத்தின் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக கிடங்கில் ஆறு தொட்டிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
தண்ணீர் செல்ல வழி இல்லாமல் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசி தொற்றுபரவும் வாய்ப்புள்ளது.
ரூ. 2 லட்சத்தில் கட்டியுள்ள கிடங்கை பராமரித்து குப்பை கொட்டுவதற்கும் அதனை தரம் பிரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.