/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பழைய அவசர சிகிச்சை வார்டு கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

ADDED : ஜன 03, 2024 05:55 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்பழைய அவசர சிகிச்சை வார்டு கட்டடம் பயன்பாடில்லாமல் உள்ளதால் அதனை சீரமைத்து பயன்பாட்டிற்குகொண்டு வர வேண்டும்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரூ.154.84 கோடியில் 500 படுக்கைகள் கொண்ட 5 தளங்கள் மருத்துவமனை வளாகம் கட்டப்பட்டுள்ளது. இது தவிர்த்து பழைய கட்டடத்தில் அறுவை சிகிச்சை அரங்கு, டெங்கு வார்டு,ஆண்கள், பெண்கள் பொது மருத்துவப்பிரிவு செயல்படுகிறது.
பழைய கட்டடங்களில் இருந்து புதியகட்டடத்திற்கு பல்வேறு வார்டுகள் மாற்றம்செய்யப்பட்டுள்ளன. அவரச சிகிச்சை வார்டு பழைய கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்த கட்டடத்தில்முதல் தளத்தில் எலும்பு முறிவு பிரிவும், இரண்டாம்தளத்தில் ரத்த வங்கியும் செயல்பட்டு வருகிறது.
கீழ்தளத்தில் ஸ்கேன் பிரிவு மட்டுமே தற்போது இயங்கி வருகிறது. கீழ்தளம் முழுவதும் பயன்பாடின்றி உள்ளது.
அதனை அப்படியே விட்டு விடாமல் அரசு மருத்துவமனை நிர்வாகம் பழைய கட்டடங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.