/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி மும்முனை சந்திப்பில் தொடரும் போக்குவரத்து நெரிசல் அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கை தேவை
/
சாயல்குடி மும்முனை சந்திப்பில் தொடரும் போக்குவரத்து நெரிசல் அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கை தேவை
சாயல்குடி மும்முனை சந்திப்பில் தொடரும் போக்குவரத்து நெரிசல் அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கை தேவை
சாயல்குடி மும்முனை சந்திப்பில் தொடரும் போக்குவரத்து நெரிசல் அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கை தேவை
ADDED : ஆக 26, 2025 03:26 AM
சாயல்குடி: -சாயல்குடி நகரில் மும்முனை சந்திப்பில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இப்பிரச்னைக்கு நெடுஞ்சாலைத்துறையினர், போலீசார், வருவாய்துறையினர் இணைந்து தீர்வு காண வேண்டும்.
சாயல்குடியில் கிழக்கே ராமநாதபுரம் சாலை, தெற்கில் திருச்செந்துார் சாலை, மேற்கில் அருப்புக்கோட்டை சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் கனரக வாகனங்கள் செல்வதில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு வருகிறது.
வளர்ந்து வரும் நகராக உள்ள சாயல்குடிக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.
அதே போன்று ராமேஸ்வரம், திருச்செந்துார், கன்னியாகுமரி, அருப்புக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரக்கூடிய பஸ்கள் சாயல்குடி மார்க்கமாகவே செல்கின்றன.
இந்நிலையில் மும்முனை சந்திப்பில் இருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகளால் ஒரே நேரத்தில் இரண்டு பஸ்கள் செல்வதற்கு கூட வழியின்றி சிரமத்தை சந்திக்கின்றனர்.
குறிப்பாக சனிக் கிழமை சந்தை நாட்களில் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் நீண்ட போக்குவரத்து நெரிசலால் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்து விற்பனை பொருள்களை வைத்திருப்பவர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சாலையோரங்களில் டூவீலர்களை பார்க்கிங் செய்யும் போக்கும் தொடர்கிறது. பொதுமக்கள் நடந்து செல்லக் கூடிய வழித்தடங்கள் பெருவாரியாக ஆக்கிரமிப்பில் உள்ளன.
கடலாடி வருவாய்த் துறையினர், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர், சாயல்குடி போலீசார் ஒன்றிணைந்து குழுவாக அமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.