/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயன்பாடு இல்லாத புது நிழற்குடை எம்.பி., நிதி ரூ.7 லட்சம் வீணடிப்பு கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

ADDED : ஜூலை 13, 2025 10:58 PM

பெரியபட்டினம்: பெரியபட்டினம் பஸ் ஸ்டாண்டிற்குள் கடந்த ஓராண்டிற்கு முன்பு எம்.பி., நிதி ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை தற்போது வரை பொதுமக்களுக்கு பயன்பாடின்றி காட்சி பொருளாகவே உள்ளது.
கட்டடத்தின் உள்ளே கால்நடைகளின் கழிவுகளும் சுகாதாரமற்ற முறையில் பராமரிப்பின்றி உள்ளது. பெரியபட்டினம் பஸ் ஸ்டாண்டில் எம்.பி., நவாஸ்கனி நிதியின் மூலமாக ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையின் முன்பாக அப்பகுதியில் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது.
நிழற்குடை உள்ளே யாரும் செல்ல முடியாத அளவிற்கு குப்பையாகி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. வெயிலிலும், மழையிலும் பொதுமக்கள் திறந்தவெளியில் நிற்கும் அவல நிலை உள்ளது.
எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க பயணியர் நிழற்குடை கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
அப்பகுதியை துாய்மையாக வைத்துக் கொள்ள ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.