/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரெகுநாதபுரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும் உறக்கத்தில் ஊராட்சி நிர்வாகம்

ADDED : அக் 29, 2025 02:37 AM
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சமீபத்தில் பெய்த மழையால் வாறுகால் நீருடன் மழை நீர் தேங்கியுள்ளது. ஊராட்சி நிர்வாகம் உறக்கத்தில் இருப்பதால் 10 நாட்களுக்கும் மேலாக பொதுமக்களை கொசு பண்ணை உருவாகி வாட்டி வதைக்கிறது. பொதுமக்கள் கூறியதாவது:
ரெகுநாதபுரம் ஊராட்சி சார்பில் கொசுப் புகை மருந்து மற்றும் கிணறுகளில் ஊற்றக்கூடிய அபேட்டு மருந்து தெளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலமாக கொசு லார்வா புழுக்களின் உற்பத்தி கட்டுக்குள் வரும்.
மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் கொசுக்களால் நோய் பரவுவதை தடுப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தில் முறை யிட்டாலும் உரிய நிதி இல்லை என கூறுகின்றனர். எனவே திருப்புல்லாணி யூனியன் அதிகாரிகள் ரெகுநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம ஊராட்சிகளுக்கு கொசு ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு முன்வர வேண்டும்.