/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இருளில் மூழ்கியது முகவை ஊருணி பூங்கா
/
இருளில் மூழ்கியது முகவை ஊருணி பூங்கா
ADDED : நவ 28, 2025 08:06 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் முகவை ஊருணியை சுற்றி அமைக்கப்பட்ட பூங்காவில் விளக்குகள் எரியாததால் இரவில் பூட்டப்படுகிறது.
ராமநாதபுரம் அரண்மனை அருகே மக்களின் குடிநீர் தேவைக்காக ஊருணி அமைக்கப்பட்டது. அதனை சுற்றி மக்கள் நடைபயிற்சி செல்வதற்காக பூங்கா போன்று அமைக்கப்பட்டது. இதில் மக்கள் அமருவதற்கு இருக்கை, விளக்குகள் உள்ளது. வழக்கமாக பூங்கா காலை 9:00 மணி வரையும், இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
சமீப காலமாக விளக்குகள் எரியாததால் பூங்கா மாலை 6:00 மணிக்கு பூட்டப்படுகிறது. இதனால் மக்கள் பூங்காவில் நடைபயிற்சி செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். பூங்காவில் விளக்குகளை சரி செய்து, இரவு 8:00 மணி வரை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

