/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டிராக்டரில் குடம் ரூ.15க்கு விற்பனை காவிரி குடிநீர் வராததால் மக்கள் அவதி

ADDED : ஜன 18, 2024 05:44 AM
முதுகுளத்தூர்: -முதுகுளத்துார் அருகே ஏனாதி தேவர்புரத்தில் கடந்த சிலநாட்களாக காவிரி குடிநீர் வராதால், டிராக்டர் தண்ணீரை குடம் ரூ.15 விலைக்கு வாங்கி மக்கள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துார அருகே ஏனாதி தேவர்புரத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம்,கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. கிராமத்திற்கு கடந்த சிலநாட்களாகவே காவிரி குடிநீர் முறையாக வரவில்லை.
தினந்தோறும் டிராக்டர் தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். டிராக்டரில் குடம் ரூ.15 விலைக்கு வாங்குகின்றனர்.
தெருவிளக்கு முறையாக எரியாததால் இரவு நேரத்தில் வெளியே நடந்து செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே காவிரி குடிநீர் வருவதற்கும், மின்விளக்கு சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.