/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பல ஆண்டாக தண்ணீர் வராத குழாய்க்கு மாலை அணிவித்த தட்டனேந்தல் மக்கள்
/
பல ஆண்டாக தண்ணீர் வராத குழாய்க்கு மாலை அணிவித்த தட்டனேந்தல் மக்கள்
பல ஆண்டாக தண்ணீர் வராத குழாய்க்கு மாலை அணிவித்த தட்டனேந்தல் மக்கள்
பல ஆண்டாக தண்ணீர் வராத குழாய்க்கு மாலை அணிவித்த தட்டனேந்தல் மக்கள்
ADDED : செப் 07, 2025 02:53 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே தட்டனேந்தல் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் வராத குழாய்க்கு கிராமமக்கள் மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நுாதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தட்டனேந்தல் கிராமத்தில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு பல ஆண்டுகளாக குடிநீர் வருவதில்லை. 2009ம் ஆண்டு குடிநீர் திட்டம் துவங்கிய நாள் முதல் இப்பதியில் குடிநீர் வருவது கிடையாது. கடந்த பல ஆண்டுகளாக டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தண்ணீர் குழாய்க்கு மாலை அணிவித்து கிராமமக்கள் ஒப்பாரி வைத்து நுாதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஜெயபாரதி கூறியதாவது: தட்டனேந்தல் கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் வசதி கிடையாது. இதனால் டிராக்டர் தண்ணீருக்காக காத்திருந்து தண்ணீரை பிடிக்கும் அவலநிலை தொடர்கிறது. ரூ.5க்கு வாங்கிய குடிநீர் தற்போது ரூ.15க்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். டிராக்டர் தண்ணீரும் ஒரு சில நாட்கள் மட்டும் வருவதால் டிராக்டர் தண்ணீருக்காகவே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அத்தியாவசிய வேலைக்கும் செல்ல முடியவில்லை. தண்ணீரை வராத கிராமத்திற்கு ஜல்ஜீவன் திட்டத்தில் கடந்த ஆண்டு வீட்டிற்கு வீடு குடிநீர் வழங்க குழாய் வசதி ஏற்பாடு செய்தும் அந்த குழாய் அனைத்தும் சேதமடைந்து காட்சிப்பொருளாகவே உள்ளது. தேர்தல் நேரங்களில் வரும் அரசியல் வாதிகள் குடிதண்ணீர் பிரச்னையை தீர்ப்போம் என்று கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.
கிராமத்தில் தண்ணீர் இல்லாததால் இப்பகுதியில் உள்ள ஆண்களுக்கு வெளியூரிலிருந்து பெண் கொடுப்பதில்லை. அப்படி பெண் கொடுத்தாலும் தண்ணீர் இல்லாத ஊரிலிருந்து வெளியூருக்கு சென்று விடுகின்றனர். கிராமமக்கள் அன்றாட கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். தண்ணீருக்காக பணம் செலவு செய்யும் அவலநிலை தொடர்கிறது.
இனிவரும் காலங்களில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்படும். எனவே காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து கிராமத்திற்கு நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.