/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அடிப்படை வசதிக்கு ஏங்கும் 4வது வார்டு மக்கள் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் அவலம்
/
அடிப்படை வசதிக்கு ஏங்கும் 4வது வார்டு மக்கள் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் அவலம்
அடிப்படை வசதிக்கு ஏங்கும் 4வது வார்டு மக்கள் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் அவலம்
அடிப்படை வசதிக்கு ஏங்கும் 4வது வார்டு மக்கள் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் அவலம்
ADDED : டிச 06, 2025 05:34 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி 4 வார்டில் ரோடு வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 4வது வார்டில் பெரும்பாலான தெருக்களில் ரோடுகள் குண்டும் குழியுமாகவும், கழிவுநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப் படாமல் மழை நேரங்களில் சாக்கடை கழிவுகள் குடியிருப்பு பகுதிகளில் புகுவதாலும், பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
அப்துல் அஜீஸ்: பேரூராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட தர்மர் கோயில் கிழக்கு பகுதி, புள்ளமடை ரோடு கிழக்கு, மேற்கு பகுதிகள் பெரியார் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களிலும் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளதால் பெரிதும் சிரமத்தை சந்திக்கின்றோம். மேலும் மழை நேரத்தில் சாக்கடை நீருடன் மழைநீர் சேர்ந்து தெருக்கள் முழு வதும் சூழ்வதால் நோய் பரவும் அபாயம் ஏற் பட்டுள்ளது.
ராஜாமணி: இந்திரா காந்தி தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் பராமரிப் பில்லாத ரோடுகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களும், வயதானவர்களும் சென்று வருவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவு நீர் வெளியேறும் கால்வாய்கள் முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
வார்டு கவுன்சிலர் கருப்பாயி: 4வது வார்டு பகுதியில் நிலவும் ரோடு பிரச்னை, கழிவுநீர் கால்வாய் பிரச்னை உள்ளிட்டவைகள் குறித்து பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

