ADDED : ஆக 02, 2025 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான திருத்தேர்வலை, கூடலுார், நத்தக்கோட்டை, ராதானுார், சாத்தனுார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் ஆடி பட்டத்தில் விதைப்பு செய்வது ஏற்றதாக விளை நிலங்களில் உழவு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
குறிப்பாக இப்பகுதிகளில் பருவமழை கை கொடுக்கும் பட்சத்தில் ஆண்டு தோறும் ஆடி கடைசி வாரத்தில் நெல் விதைப்பு செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் பெரும்பாலான விளை நிலங்கள் உழவு செய்யப்படாத நிலையில் உள்ளன.
இதனால் தற்போதுள்ள ஈரப்பதத்தை பயன்படுத்தி நெல் விதைப்புக்கு ஏற்ற வகையில் நிலத்தை தயார்படுத்தும் வகையில், டிராக்டர் மூலம் விவசாயிகள் உழவுப் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

