/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறுமியின் கொலுசை மீட்டுத்தந்த போலீசார்
/
சிறுமியின் கொலுசை மீட்டுத்தந்த போலீசார்
ADDED : ஜன 26, 2024 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: சிவகங்கை மாவட்டம் சிலுகனேந்தல் பகுதியை சேர்ந்த ராமதாஸ் மகள் சர்மிளா 10. இவர் தனது அம்மாவுடன் ஆர்.எஸ்.மங்கலம் பகுதிக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளார். சிறுமியின் ஒரு கொலுசு கழன்று விழுந்து தொலைந்தது.
சிறிது நேரம் கழித்து சிறுமி தாயிடம் கூறியதை தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் புகார் செய்தனர். விசாரணை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சிறுமி சென்ற பகுதிகளை ஆய்வு செய்து தொலைந்த கொலுசை மீட்டு ஒப்படைத்தனர்.

