/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை நகராட்சியில் இடியாப்ப சிக்கலில் வாகனப் போக்குவரத்து கண்டுகொள்ளாத போலீசார்

ADDED : ஜன 02, 2024 05:03 AM
கீழக்கரை: -கீழக்கரை நகராட்சியில் வாகனப் போக்குவரத்து இடியாப்ப சிக்கலில் உள்ள நிலையில் போலீசார் மெத்தனமாக உள்ளனர்.
கீழக்கரை நகராட்சியில் டிச., ஜன., மாதங்களில் திருமணங்கள் அதிகம் நடப்பது வழக்கம். பெரும்பாலும் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் வெளி நாடுகளிலும் கீழக்கரை பொதுமக்கள், தொழிலதிபர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஊரில் நடக்கும் விசேஷங்களுக்காக விடுமுறையில் வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கீழக்கரை நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில யாத்திரீகர்கள் அதிகளவில் டூரிஸ்ட் பஸ்களில் கீழக்கரை நகருக்குள் உள்ள தர்காவுக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் செல்ல வழியின்றி தவிக்கின்றனர். குறைந்த எண்ணிக்கையில் போலீசார் போக்குவரத்தை சரி செய்வதால்வாகன ஓட்டிகள் இடையே அடிக்கடி பிரச்னைகளும், விவாதங்களும் நடக்கிறது.
சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் ரோட்டோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடியாப்பச் சிக்கலை சந்திக்கின்றனர்.
எனவே கீழக்கரை போலீசார் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.