/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடியில் தண்ணீர் டேங்கர் இயக்கும் பணியில் சிறுவர்கள் கண்டுகொள்ளாத போலீசார்
/
ஏர்வாடியில் தண்ணீர் டேங்கர் இயக்கும் பணியில் சிறுவர்கள் கண்டுகொள்ளாத போலீசார்
ஏர்வாடியில் தண்ணீர் டேங்கர் இயக்கும் பணியில் சிறுவர்கள் கண்டுகொள்ளாத போலீசார்
ஏர்வாடியில் தண்ணீர் டேங்கர் இயக்கும் பணியில் சிறுவர்கள் கண்டுகொள்ளாத போலீசார்
ADDED : அக் 22, 2024 04:38 AM
கீழக்கரை: ஏர்வாடி பகுதியில் தண்ணீர் டேங்கர் இயக்கும் பணியில் சிறுவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
ஏர்வாடி ஊராட்சியில் கடற்கரையோரப் பகுதியை சுற்றிலும் பத்திற்கும் அதிகமான குக்கிராமங்கள் உள்ளன. ஏர்வாடி தர்காவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் யாத்ரீகர்கள் வந்து செல்கின்றனர். இங்கு நுாறுக்கும்அதிகமான தனியார் விடுதிகள் உள்ளன.15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கு சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து கிடைக்கும் குடிநீரை சேகரித்து டேங்கர் லாரி மற்றும் டிராக்டர்களில் வீடுகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் தனியார்விடுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்கின்றனர்.
டேங்கர் லாரிகளை முறையாக லைசென்ஸ் பெற்ற தகுதியானவர்கள் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும். தற்போது குடிநீர் டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் 15 முதல் 18 வயது நிரம்பாத சிறுவர்கள்,லைசென்ஸ் இல்லாத நிலையில் வாகனம் ஓட்டுவதால் அடிக்கடி அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படுகிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
ஏர்வாடி தர்காவிற்கு நாள்தோறும் ஏராளமானபொதுமக்கள் வருகின்றனர்.
அதிக வாகன நெரிசல்உள்ள இடங்களில் டேங்கர் லாரிகளை சர்வ சாதாரணமாக சிறுவர்கள் ஓட்டுகின்றனர். பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பை இடையில் நிறுத்தும் சிறுவர்கள் குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கின்றனர். அவற்றை கண்காணிக்க வேண்டிய போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இன்றி கடந்து செல்கின்றனர்.
எனவே ஏர்வாடி, சுற்றுவட்டார கிராமங்களில் சரக்கு வாகனங்களை இயக்கும் சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.