/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வழுதூரில் பொங்கல் விழா கொண்டாட்டம்; பல்வேறு போட்டிகளால் களை கட்டியது

ADDED : ஜன 15, 2024 11:20 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வழுதுாரில் நடந்த பொங்கல் விழாவில்பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குபரிசுகள் வழங்கப்பட்டன.
வழுதுார் கிராமத்தில் உள்ள அருளொளி விநாயகர் கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் 30 நாட்களிலும் விநாயகப் பெருமானுக்கு பல்வேறு விதமான அபிேஷகங்கள், அலங்காரங்கள், ஆராதனை நடந்தது.
தை முதல் நாளைமுன்னிட்டு பால், பன்னீர், இளநீர், திரவியப் பொடி, மஞ்சள் பொடி உள்ளிட்ட 11 வகை அபிேஷக ஆராதனைகள்நடந்தன. சிறுவர், சிறுமிக்கு 50, 100 மீ., ஓட்டப் போட்டிகள்நடந்தது. இளைஞர்களுக்கு 1 கி.மீ., ஓட்டப்பந்தயம், செங்கல் மீது நடக்கும் போட்டிகள், பெண்களுக்கு பாட்டிலில்தண்ணீர் நிரப்பும் போட்டி, யானைக்கு கண் வைக்கும்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்வழங்கப்பட்டன.
விழாவின் நிறைவில் அனைவருக்கும்அன்னதானம் வழங்கப்பட்டது. போட்டி ஏற்பாடுகளை வழுதுார் அருளொளி மன்றத்தினர் செய்திருந்தனர்.------