/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதளம் திட்டம் கிடப்பில்! மண் தரையால் பயிற்சி பெற சிரமப்படும் வீரர்கள்

ADDED : செப் 18, 2025 10:57 PM

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் மாநில தேசிய, உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதித்து வருகின்றனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஓடு தளம் மண் தரையாக உள்ளதால் இங்கு பயிற்சி எடுக்க வீரர்கள், மாண வர்கள் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக மைதானத்தில் செயற்கை ஓடுதளம் (சிந்தெடிக்) வசதியின்றி, தடகளப் போட்டியில் சாதிக்கும் வீரர், வீரங்கனைகள் மாநில, தேசிய போட்டிகளுக்கு பயிற்சி பெறுவதற்காக வெளியூர்களுக்கு சென்று வர சிரமப்படு கின்றனர். எனவே செயற்கை ஓடுதளம் அமைக்க வேண்டும் என வீரர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சட்டசபை கூட்டத்தொடரில் விளையாட்டுதுறை மானியக்கோரிக்கையில் ராமநாத புரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் ரூ.11 கோடியில் கால்பந்து விளையாட்டு மைதானம், செயற்கை ஓடுதளம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு எந்தவிதமான நடவடிக்கையும் இன்றி அப்படியே கிடப்பில் உள்ளது.
எனவே 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அரசு அறிவித்தப்படி செயற்கை ஓடுதளம், கால்பந்து மைதானம் அமைக்கும் பணிகளை நடப்பபு ஆண்டில் துவங்க விளை யாட்டு மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.