/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உறிஞ்சி குழாய்கள் அமைக்கும் திட்டம் நிதி வீண்: ஓய்வெடுக்கும் கால்நடைகள்
/
உறிஞ்சி குழாய்கள் அமைக்கும் திட்டம் நிதி வீண்: ஓய்வெடுக்கும் கால்நடைகள்
உறிஞ்சி குழாய்கள் அமைக்கும் திட்டம் நிதி வீண்: ஓய்வெடுக்கும் கால்நடைகள்
உறிஞ்சி குழாய்கள் அமைக்கும் திட்டம் நிதி வீண்: ஓய்வெடுக்கும் கால்நடைகள்
ADDED : ஜூலை 07, 2025 02:26 AM
கடலாடி : ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.பல லட்சம் செலவில் அமைக்கப்படும் உறிஞ்சு குழாய்கள் பயன்பாடின்றி கால்நடைகள் ஓய்வெடுக்கும் இடமாகியுள்ளன.
கடலாடி, திருப்புல்லாணி, மண்டபம், கமுதி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் கடந்த ஓராண்டுகளில் அதிக அளவு உறிஞ்சி குழாய்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிராமங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் வாறுகால் அருகே உறிஞ்சிக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
யூனியன்களின் மூலம் 15வது மானிய குழு திட்டத்தில் கிராமத்தில் உள்ள ஊராட்சிகளில் இரண்டு ஆண்டுகளில் உறிஞ்சி குழாய்கள் அமைக்கும் திட்டத்தில் குறிப்பிட்ட அளவிற்கு ஆழமாக தோண்டி அவற்றில் தொட்டிகளை இறக்கி சுற்றிலும் ஜல்லிக்கற்களை வைக்கின்றனர்.
இவற்றிற்கு திட்ட மதிப்பீட்டு தொகையாக ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரை செலவழிக்கின்றனர்.
இத்திட்டத்தால் எவ்வித பயன்பாடும் இல்லை. தற்போது கோடை வறட்சி காலங்களில் உறிஞ்சி குழாய் திட்டம் பல இடங்களில் கால்நடைகள் ஓய்வெடுக்கும் இடமாகவும், சிதிலமடைந்தும் சேதமடைந்தும் காணப்படுகிறது.
இத்திட்டத்திற்கு செலவிடப்படும் நிதியை கிராமங்களின் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் வாகன ஓட்டிகளுக்கு சேதப்படுத்தும் வகையில் அமைந்துள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராமங்களின் கண்மாய் கரையோரங்களில் குடிநீர் தொட்டி உள்ளன. அவற்றில் சேதமடைந்திருப்பதால் தண்ணீர் நிரப்ப வாய்ப்பில்லாத நிலை தொடர்கிறது.
எனவே பொதுமக்கள் அன்றாடம் குளிப்பதற்கு ஏற்ற வகையில் குளியல் நீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.