/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஞ்சந்தாங்கியில் காவிரிநீர் பல மாதங்களாக சப்ளை இல்லாததால் பொதுமக்கள் அவதி கிடைமட்ட தொட்டி இருந்தும் பயனில்லை

ADDED : ஜூலை 12, 2025 11:31 PM
திருப்புல்லாணி: - திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கியில் காவிரி குடிநீருக்கான தரைமட்ட தொட்டி 2007ல் கட்டப்பட்டது.
பஞ்சந்தாங்கியில் உள்ள தரைமட்ட குடிநீர் தொட்டியில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு காவிரி குடிநீர் பிரதான குழாய்களின் வழியாக சென்று பம்பிங் செய்யப்பட்டு விநியோகம் நடக்கிறது.
இந்நிலையில் பிரதான கிராமமாக உள்ள பஞ்சந்தாங்கியில் பல மாதங்களாக காவிரி நீர் சப்ளை இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
பஞ்சந்தாங்கி பொதுமக்கள் கூறியதாவது: இங்கிருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு அதிகளவு தண்ணீர் கொண்டு செல்லும் நிலையில் இப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுக்கு இதுவரை காவிரி குடிநீர் சப்ளை இல்லாமல் உள்ளது.
இங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதற்கு கூட வழியில்லாத நிலை தொடர்கிறது.
மோட்டார் திறன் குறைந்துள்ளதால் தண்ணீர் ஏற்ற இயலவில்லை என ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் பெருவாரியான கிராமங்களுக்கு செல்லும் காவிரி நீரை சிலர் அதிக திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்தி தண்ணீரை சட்டவிரோதமாக உறிஞ்சி எடுக்கின்றனர். இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல் காட்சி பொருளாகவே உள்ளது.
எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் காவிரி குடிநீர் பராமரிப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து கிராமத்திற்கு காவிரி குடிநீர் சப்ளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.