/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிவகங்கை போலீசாருடன் இணைந்து செயல்பட்ட ராமநாதபுரம் போலீசார்
/
சிவகங்கை போலீசாருடன் இணைந்து செயல்பட்ட ராமநாதபுரம் போலீசார்
சிவகங்கை போலீசாருடன் இணைந்து செயல்பட்ட ராமநாதபுரம் போலீசார்
சிவகங்கை போலீசாருடன் இணைந்து செயல்பட்ட ராமநாதபுரம் போலீசார்
ADDED : பிப் 26, 2024 12:52 AM
திருவாடானை : காளையார்கோவில் அருகே 60 பவுன் நகை கொள்ளை வழக்கில் சிவகங்கை மாவட்ட போலீசாருடன் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் இணைந்து செயல்பட்டு திருடர்களை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கல்லுவழி மரக்கடை உரிமையாளர் சின்னப்பன் 70. இவரது மனைவி உபகாரமேரி 65. ஜன.26 அதிகாலை 3:00 மணிக்கு இரும்பு கம்பியால் சின்னப்பன், காரமேரி உள்ளிட்ட ஐந்து பேரை தாக்கிவிட்டு பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகைகளை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருடர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றபிரிவில் பணியாற்றும் எஸ்.ஐ., தலைமையில் ஆறு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் கூறியதாவது:
சிவகங்கை மாவட்ட போலீசாருடன் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் இணைந்து செயல்பட்டோம்.
இச்சம்பவத்திற்கு முக்கிய காரணமான தினேஷ்குமாரை கைது செய்தோம். தமிழகத்தில் பல்வேறு திருட்டுகளில் தினேஷ்குமார் ஈடுபட்டுள்ளதால் திண்டுக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர் என்றனர்.

