/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை கடல் பல்லிகள் பட்டியல் எண் 1ல் உள்ளன
/
மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை கடல் பல்லிகள் பட்டியல் எண் 1ல் உள்ளன
மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை கடல் பல்லிகள் பட்டியல் எண் 1ல் உள்ளன
மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை கடல் பல்லிகள் பட்டியல் எண் 1ல் உள்ளன
ADDED : டிச 04, 2025 05:40 AM

கீழக்கரை: கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரகத்திற்கு உட்பட்ட கடல் பகுதிகளை விஷமில்லாத அரிய வகை கடல் பல்லிகள் வாழ்விடங்களாக கொண்டுள்ளன.
மன்னார் வளைகுடா கடலில் பல்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. குறிப்பாக கடல் பசுக்கள், கடல் குதிரைகள், கடல் அட்டைகள், டால்பின்கள், சித்தாமைகள், பவளப்பாறைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான அரியவகை உயிரினங்கள் காணப்படுகின்றன. மன்னார் வளைகுடாவில் காணப்படும் கடல் பல்லிகள் தனித்துவமானவை. அமைதியானவை. அவற்றில் விஷம் கிடையாது.
நீண்ட கொத்தவரைக்காயை போல 10 முதல் 15 செ.மீ., நீளத்திற்கு காணப்படும்.
பெரும்பாலும் பசுமை மற்றும் பழுப்பு நிறங்களில் டோகோங் இன கடல் பல்லிகள் காணப்படுகின்றன. பவளப் பாறைகள் மற்றும் கடல் புல் படுகையில் கடல் பல்லிகள் அதிகமாக காணப்படு கின்றன. இவை பெரும்பாலும் கடல் புற்கள், கடற்பாசிகள் மற்றும் சிறிய நீர்வாழ் உயிரினங்களை உணவாக உட்கொள் கின்றன.
கடல்வாழ் தாவரங்களை முதன்மையாக உண்ணும் விலங்காகும். கடல் உணவு சங்கிலியில் ஒரு முக்கிய பங்கு வகிக் கின்றன.
20 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியவை. 20 முதல் 50 எண்ணிக்கையில் வருடத்திற்கு ஒருமுறை முட்டையிட்டு பவளப் பாறைகளுக்கு இடையில் உள்ள பகுதிகளில் குஞ்சு பொரித்து அவற்றில் இருந்து வெளியேறுகின்றன. மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவை வளர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன.
கடல் பல்லிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பவை சுருக்குமடி மீன்பிடித்தல் மற்றும் இழுவை மடி மீன்பிடித்தல் ஆகும். கடலில் கழிவுநீர் கலத்தல் உள்ளிட்டவை மூலமாகவும் கடல் வளம் பாதிக்கப்படும் போது எண்ணிக்கை வெகுவாக குறைகின்றன. கடல் பல்லியை டால்பின், சுறா உள்ளிட்ட பெரிய ரக மீன்களும், கடல் பறவைகளும் உணவாக உட்கொள்கின்றன.
மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலர்கள் கூறியதாவது: கடலின் ஆழம் குறைவான பகுதிகளிலும், தீவுகளை சுற்றிலும் கடல் பல்லிகள் வசிக்கின்றன. மீனவர்களின் வலையில் எதிர்பாராமல் கடல் பல்லிகள் சிக்கும் போது அவற்றை பாதுகாப்பாக உயிருடன் கடலில் விட்டு விடுகின்றனர். அவற்றை பிடித்து வைத்திருப்பது பட்டியல் எண் 1ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
கடலின் தகவமைப்பு உணவு சங்கிலியில் கடல் பல்லியின் பங்களிப்பு இன்றியமையாதது. அவற்றை உணவிற்கு பயன்படுத்தக் கூடாது. மீனவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இது குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்துகிறோம் என்றனர்.

