/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கொலை செய்யப்பட்டவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுப்பு ராமநாதபுரம் கொண்டு செல்வதால் பாதிப்பு

ADDED : ஆக 08, 2025 02:59 AM
திருவாடானை:திருவாடானை அரசு மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட வரின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் ராமநாதபுரம் கொண்டு செல்ல கூறியதால் உறவினர்கள் மற்றும் போலீசார் பாதிக்கப்பட்டனர்.
திருவாடானையில் அரசு மருத்துவமனை உள்ளது. தினமும் 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளி களாக சிகிச்சை பெறுகின்ற னர். இரண்டு டாக்டர்கள் பணியாற்றுகின்றனர்.
திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி போன்ற போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் நடக்கும் விபத்து, கொலை, தற்கொலை செய்பவர்களின் உடல்கள் இங்கு பிரேத பரிசோதனை செய்யப்படும்.
சில மாதங்களாக விபத்து மற்றும் தற்கொலை செய்பவர்களின் உடல் மட்டும் இங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. கொலை செய்யப்பட்ட வரின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் கொலையானவரின் உறவினர்கள் மற்றும் போலீசார் சிரமப்படுகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாத பட்சத்தில் இங்கு பரிசோதனை செய்யலாம். கடந்தாண்டுகளில் கொலையானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சில மாதங்களாக தான் ராமநாதபுரம் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் இறந்தவரின் உறவினர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். போலீசாரும் சிரமப்படுகின்றனர்.
நேற்று முன்தினம் மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த ஒரு முதியவர் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுத்த தால் உடல் ராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டது. ஏழ்மையான அக்குடும்பத்தினர் மிகவும் சிரமம் அடைந்தனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.