/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விடுதலையான மீனவர்கள் நேற்று வீடு திரும்பினர்
/
விடுதலையான மீனவர்கள் நேற்று வீடு திரும்பினர்
ADDED : ஏப் 27, 2025 03:14 AM
ராமேஸ்வரம்: பிரதமர் மோடி ஏப்.,4ல் இலங்கை சென்றதையொட்டி சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் விடுவிக்கப்பட்டு நேற்று வீடு திரும்பினர்.
மார்ச் 27ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். ஏப்.,4ல் பிரதமர் மோடி இலங்கை சென்ற போது நல்லெண்ண அடிப்படையில் சிறையில் இருந்த 14 மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டது.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் கொழும்பு அருகே மெரிகானா முகாமில் தங்கி இருந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் கொழும்பில் இருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு சென்னை வந்திறங்கினர்.
பின் ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரிகள் வேனில் அழைத்து வந்து நேற்று காலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

