/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையை நிர்ணயிக்க வேண்டும்
/
நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையை நிர்ணயிக்க வேண்டும்
நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையை நிர்ணயிக்க வேண்டும்
நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையை நிர்ணயிக்க வேண்டும்
ADDED : ஜன 24, 2025 04:26 AM
கடலாடி:' கடலாடி சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை நேரத்தில் அறுவடை இயந்திரங்களின் வாடகையை வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலாடி, மேலச்செல்வனுார், ஆப்பனுார், பாடுவனேந்தல், கீழச்செல்வனுார், கடுகுச்சந்தை சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ள நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்படாத நிலையில் வாடகை உயர்ந்து வருவதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மயில்வாகனன் கூறியதாவது:
வேளாண் துறையின் ஒரு பிரிவாக செயல்படும் பொறியியல் பிரிவு சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் கதிர் அறுக்கும் அறுவடை இயந்திரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம், சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில் மழை சூழ்நிலை பயன்படுத்தி அறுவடை இயந்திர உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஏஜன்டுகள் மூலம் தொடர்பு கொள்கின்றனர்.
அறுவடைக்கு அதிகமான வாடகை வசூல் செய்வதால் விவசாயிகள் மேற்கொண்டு கடன் பிரச்னைக்கு ஆளாகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு ரூ.1700 முதல் 1800 வரை விவசாயிகளிடம் வாடகை வாங்குகின்றனர்.
விவசாயிகளின் கூடுதல் நிதிச் சுமையை குறைக்க மாவட்ட நிர்வாகத்தினர் வேளாண் பொறியியல் துறையின் மூலம் மானிய விலையில் அறுவடை இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு கூடுதல் கடன் சுமையை தவிர்க்க உதவும் என்றார்.