/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காதில் பூக்களை சுற்றியவாறு கிராம சபை கூட்டத்தில் மக்கள் பங்கேற்பு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை

ADDED : ஆக 15, 2025 11:21 PM

திருப்பல்லாணி: திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சியில் நேற்று காலை 11:00 மணிக்கு நடந்த கிராம சபை கூட்டத்தில் காதில் பூக்களை சுற்றியபடி மக்கள் பங்கேற்றனர். தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
கிராம சபை கூட்டத்தில் 9 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் தங்களது காதுகளில் கதம்ப பூக்களை சூடிக்கொண்டனர். கிராம மக்கள் கூறியதாவது:
தினைக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதியதாக கட்டப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படவில்லை.
ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட வேதக்காரன் வலசை ரேஷன் கடை கட்டடமும் திறப்பு விழா காணப்படவில்லை.
மடத்துாரணி முனியசாமி கோயிலில் இருந்து அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 30 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் தலைமையில் இப்பகுதியில் நடந்த இரண்டு கிராம சபை கூட்டங்களிலும் கோரிக்கை மனு அளித்தும் பயனில்லை.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் பெயரளவிற்கு நடக்கும் கிராம சபை கூட்டத்தில் கவன ஈர்ப்பாக காதில் பூசுற்றியவாறு கலந்து கொண்டோம் என்றனர்.
திருப்புல்லாணி யூனியன் பி.டி.ஓ., ராஜேஸ்வரி மற்றும் இன்ஜினியர் ராமசாமி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் உடன்படாததால் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.