/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சக்கரகோட்டையில் ரோடு படுமோசம் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு
/
சக்கரகோட்டையில் ரோடு படுமோசம் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு
சக்கரகோட்டையில் ரோடு படுமோசம் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு
சக்கரகோட்டையில் ரோடு படுமோசம் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு
ADDED : செப் 27, 2025 11:36 PM

ராமநாதபுரம்: சக்கரகோட்டை ஊராட்சியில் குண்டும் குழியுமான ரோடுகள், பன்றி, நாய்த்தொல்லை, சாக்கடை வசதியின்றி தேங்கும் கழிவுநீரால் மக்கள் தினமும் சிரமப் படுகின்றனர்.
ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை குடி யிருப்போர் பொதுமக்கள் நலச் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தலைவர் வெற்றிவெல் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் ஞானசேகரன், துணைதலைவர் முகமது சாதிக், ஒருங் கிணைப்பாளர் ராமநாதன், துணை செயலாளர் தன சேகரன், செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, முனியசாமி பங்கேற்றனர். அவர்கள் கூறியதாவது:
வெற்றிவெல், தலைவர்: சிவஞானபுரம் வழியாக சக்கரகோட்டை பள்ளி வாசல் பின்புறம் பள்ளியின் அருகே சாக்கடை பரா மரிப்பின்றி கழிவுநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது.
துர்நாற்றத்தால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். நோய்த் தொற்று அபாயம் உள்ளது. திருவள்ளுவர் நகர் ஆதிதிராவிடர் மக்கள் 40 ஆண்டுகளாக குடியிருக்கின்றனர். அவர்களுக்கு இதுவரை தெருவிளக்கு வசதி செய்துதரவில்லை. குமரய்யா கோவில் பஸ் ஸ்டாப் நான்கு முனை சந்திப்பாக உள்ளதால் விபத்துக்கள் நடக்கிறது.
எனவே தற்போதுள்ள பஸ் ஸ்டாப்பை ஐ.ஓ.பி., வங்கி முன்பாக மேற்கு பகுதிக்கு இடமாற்ற வேண்டும். மஞ்சன மாரியம்மன் நகரில் பொது மயானம் பராமரிப்பின்றி முட் செடிகள் வளர்ந்துள்ளன. அப்பகுதியில் இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதனை அகற்றி சுத்தம் செய்து தரவேண்டும்.
ஞானசேகரன், துணைச் செயலாளர்: நேருநகர் ரோடு சேதமடைந்துள்ளது. புதிதாக சாலை அமைக்க வேண்டும். குமரய்யா கோயில் முதல் கீழ சோத்துாருணி சாலையை புதிதாக அகலப்படுத்த வேண்டும்.
கண்மாய் வாய்க்கால், சோத்துருணி ஆகிய நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஊருணிகளுக்குள் கழிவுநீர் கலக்கிறது. அவற்றை துார்வாரி கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். புதர்மண்டியுள்ள இடங்களில் இளைஞர்கள் போதைபொருள் அருந்து கின்றனர். இதை போலீசார் தடுக்க வேண்டும்.
ராமநாதன், ஒருங்கிணைப்பாளர்: சக்கரகோட்டையில் ஜல்-ஜீவன் திட்டத்தில் 5000 வீடுகளுக்கும் மேல் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. இவைகளுக்கு வழங்குவதற்கு உரிய மேல்நிலைத் தொட்டிகள் போதுமான அளவில் இல்லை. கூடுதலாக 1 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். குப்பையை தினமும் வண்டிகள் மூலம் அகற்ற வேண்டும்.
நேரு நகர், மகாசக்தி நகர், சிவஞானபுரம் ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் கால்வாய் ரூ.1.5 கோடியில் அமைக்கப்பட்டு பயன்பாடில்லாமல் நிதி வீணாகியுள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.
இதே போன்ற கோரிக்கைகள் குறித்து ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து உள்ளோம். அதன் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர்.