
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மட்டியரேந்தல் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமத்தின் நடுவில் சர்ச், மாரியம்மன் கோயில், ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. நடுத்தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதியாக இருப்பதால் மழைநீர் செல்ல வழியில்லாமல் பொது இடம், நடுத்தெரு பகுதிகளில் தண்ணீர் தேங்கி ரோடு சேறும் சகதியுமாக மாறி நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். வாகனங்கள் பள்ளத்தில் சிக்கும் நிலை உள்ளது. மழை பெய்தால் நடப்பதற்கு மக்கள் தவிக்கின்றனர்.
சர்ச், கோயிலுக்கு பொதுமக்கள் வந்து செல்லும் வழியாக இருப்பதால் அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.