/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இதம்பாடல் - உத்தரகோசமங்கை செல்லும் சாலை பல இடங்களில் சேதம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது

ADDED : ஆக 11, 2025 03:44 AM

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் இருந்து இதம்பாடல் செல்லக்கூடிய மாநில நெடுஞ்சாலை 10 கி.மீ.,க்கு கடந்தாண்டு புதிதாக ரோடு அமைக்கப்பட்டது. இந்நிலையில் ரோட்டில் பல இடங்களில் சேதமடைந்தும் சாலையோரங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
உத்தரகோசமங்கையில் இருந்து இதம்பாடல் செல்லும் ரோட்டின் வழியாக நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் அரசு பஸ்கள் உள்ளிட்டவை சாயல்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றன. சுற்றுவட்டார கிராம மக்கள் அதிகளவு தார்சாலையை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக மாறி வருகிறது.
முன்பு விபத்து அதிகம் நடக்கும் இடங்களில் பக்கவாட்டு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன. தற்போது அவை ஏதுமின்றி திறந்த வெளியாக இருப்பதால் அருகே உள்ள பெரிய பள்ளங்கள் மற்றும் திருப்பங்களில் வாகனங்கள் கீழே விழும் அபாயம் நிலவுகிறது.
எனவே மாநில நெடுஞ்சாலை துறையினர் மீண்டும் பராமரிப்பு பணிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்த னர்.