/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில் கார் பார்க்கிங்கில் குண்டும் குழியுமாக ரோடு
/
கோயில் கார் பார்க்கிங்கில் குண்டும் குழியுமாக ரோடு
கோயில் கார் பார்க்கிங்கில் குண்டும் குழியுமாக ரோடு
கோயில் கார் பார்க்கிங்கில் குண்டும் குழியுமாக ரோடு
ADDED : ஜன 02, 2025 11:27 PM

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான கார் பார்க்கிங் ஜெ.ஜெ., நகரில் 11 ஏக்கரில் உள்ளது. இந்த கார் பார்க்கிங்கில் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்த வசதியும் உள்ளது.
இங்கு நிறுத்தும் ஒரு வாகனத்திற்கு ரூ. 20 கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் கார் பார்க்கிங் பராமரிப்பின்றி இங்குள்ள ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் பக்தர்கள் மற்றும் வாகனங்கள் பாதுகாப்பிற்காக பொருத்தி இருந்த 10 சி.சி.டி.வி., கேமராக்களும் பழுதாகியுள்ளன.
பக்தர்கள் நலன் கருதி சாலை, தளங்களை சீரமைத்து, சி.சி.டி.வி., கேமராக்களை பழுது நீக்கி பாதுகாப்பை உறுதிப்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.