/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சீரமைத்த மறுநாளே குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடு
/
சீரமைத்த மறுநாளே குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடு
ADDED : நவ 20, 2025 04:14 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சியில் அரசு மருத்துவமனை அருகே சில நாட்களுக்கு முன்பு ரோடு சீரமைக்கப்பட்ட நிலையில் மறுநாளே குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளதால் ரோடு சேதமடைந்துள்ளது.
முதுகுளத்துார் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு பல தெருக்களில் ரோடு குண்டும் குழியுமாக சேதமடைந்து இருப்பதால் பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் சிமென்ட் கலந்து ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு ரோடுகள் சீரமைக்கப்பட்டு வந்தது.
முதுகுளத்துார் அரசு மருத்துவமனை அருகே ரோடு சீரமைக்கப்பட்ட நிலையில் மறுநாளே குடிநீர் குழாய் பதிப்பதற்காக ரோடு தோண்டப்பட்டு சேதமடைந்துள்ளது. மழை பெய்தால் மீண்டும் ரோடு சேறும் சகதியுமாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அரசின் நிதியும் வீணடிக்கப்படுகிறது. இதனால் ரோடு சீரமைத்தும் எந்த பயனும் இல்லை.
எனவே அதிகாரிகள் முறையாக திட்டமிடல் செய்து ரோடு சீரமைப்பு பணிக்கு முன்பு குழாய்கள் பதிக்கப்பட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

