/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்
/
கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்
கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்
கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்
ADDED : அக் 23, 2024 04:43 AM
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால் உரம் விற்பனையை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 22 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆக., கடைசி வாரத்தில் நெல் விதைப்பு செய்யப்பட்ட நிலையில் அதன் பின் கை கொடுத்த பருவமழையால் தற்போது ஆர். எஸ்.மங்கலம் வட்டாரத்தில் பரவலாக நெற்பயிர்கள் முளைத்து வளர்ச்சி நிலையில் உள்ளன.
இந்நிலையில், விவசாயிகள் நெற்பயிர்களுக்கு இடையூறாக உள்ள களைகளை கட்டுப்படுத்தும் விதமாக களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து சில பகுதிகளில் வயல்களில் நிலவும் ஈரப்பதத்தை பயன்படுத்தி விவசாயிகள் நெற்பயிர்களுக்கு அடி உரமாக டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ், கலப்பு உரம், யூரியா உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு உரத் தேவை அதிகரிக்க துவங்கி உள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சில உரக்கடைகளில் விவசாயிகளிடம் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உரக்கடைகளில் உரங்களின் விலை பட்டியலை விவசாயிகளின் பார்வைக்கு தெளிவாக வைக்கவும், கூடுதல் விலை உர விற்பனையை தடுக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.