/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அருங்காட்சியகத்திற்கு இடம் தேடல் ஆமை வேகம்! இடியும் அச்சத்தில் அலுவலகம் மூடல்
/
அருங்காட்சியகத்திற்கு இடம் தேடல் ஆமை வேகம்! இடியும் அச்சத்தில் அலுவலகம் மூடல்
அருங்காட்சியகத்திற்கு இடம் தேடல் ஆமை வேகம்! இடியும் அச்சத்தில் அலுவலகம் மூடல்
அருங்காட்சியகத்திற்கு இடம் தேடல் ஆமை வேகம்! இடியும் அச்சத்தில் அலுவலகம் மூடல்
ADDED : ஜூலை 19, 2024 11:55 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இடிந்து விழும் பழைய கட்டடத்தில் விபத்து அச்சத்தால் அரசு அருங்காட்சியகம் செயல்படவில்லை. இடமின்றி ரூ.5 கோடியில் புதிய அருங்காட்சியகம் அமைக்கும் திட்டத்திற்கு இடம் தேடும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.
ராமநாதபுரம் கேணிக்கரை ரோட்டில் ஜவான் பவன் கட்டடத்தில் முதல் தளத்தில் 2008 முதல் அரசு அருங்காட்சியகம் செயல்படுகிறது. இங்கு 65 கற்சிலைகள், மரத்தினாலான சிற்பங்கள், ஓவியங்கள், அரிய வகை நாணயங்கள், ஓலைச்சுவடிகள் என ஏராளமான பழங்கால பொருட்கள் உள்ளன.
இந்த கட்டடம் 1990ல் கட்டப்பட்டு போதிய பராமரிப்பின்றி தற்போது கூரை சிமென்ட் பூச்சுகள் இடிந்து விழுகிறது. பல இடங்களில் சுவரில் விரிசல் உள்ளதால் விபத்து அச்சத்தால் மூடப்பட்டுள்ளது. அலுவலகம் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. அங்கு பணிபுரியும் அலுவலர்கள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.
ரூ.5 கோடியில் ஒரு ஏக்கரில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ராமேஸ்வரம் அப்துல் கலாம் தேசிய நினைவகம் அருகே, யாத்திரை நிவாஸ் பகுதி மற்றும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் ரோடு, பட்டணம்காத்தான் அம்மா பூங்கா அருகே இடங்களை வருவாய்துறையினர் ஆய்வு செய்தனர். அதன் பின் அப்படியே கிடப்பில் விட்டுள்ளனர். பழங்கால பொருட்கள், அலுவலகர்கள் பாதுகாப்பு கருதி வேறு இடத்திற்கு அருங்காட்சியகத்தை மாற்ற அரசு உத்தரவிட வேண்டும்.
அரசு அருங்காட்சியக காப்பாளார் (பொ) பால்துரை கூறுகையில், அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. அதற்கு முன் விரைவில் வாடகை அடிப்படையில் புதிய இடத்திற்கு அருங்காட்சியகத்தை மாற்ற நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்றார்.