/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காட்சிப்பொருளாகும் சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டி கிடக்குது
/
காட்சிப்பொருளாகும் சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டி கிடக்குது
காட்சிப்பொருளாகும் சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டி கிடக்குது
காட்சிப்பொருளாகும் சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டி கிடக்குது
ADDED : மே 22, 2025 11:47 PM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சியில் மன்னார் வளைகுடா கடற்கரையோரம் பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய கழிப்பறை வளாகம் 2 ஆண்டுகளாக பயன்பாடின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
களிமண்குண்டு ஊராட்சியில் எஸ்.பி.எம்.ஜி., திட்டத்தில் 2021- - 2022ம் ஆண்டிற்கான 6 கழிப்பறைகள் கொண்ட பொது சுகாதார கழிப்பறை வளாகம் ரூ.5 லட்சத்து 28 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. எவ்வித பயன்பாடின்றி பூட்டியே வைத்திருப்பதால் பயன்படுத்த வழி இல்லாத நிலை நிலவுகிறது.
அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:
களிமண்குண்டு கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்குவதற்காகவும் வருகின்றனர். கடற்கரை ஓரத்தில் மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கழிப்பறை வளாகம் பயன்பாடின்றி பூட்டப்பட்டுஉள்ளதால் திறந்தவெளியை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே களிமண்குண்டு ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.