/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செல்லி அம்மன் கோயில் கருவறையில் பாலாலயம்
/
செல்லி அம்மன் கோயில் கருவறையில் பாலாலயம்
ADDED : செப் 11, 2025 10:39 PM
முதுகுளத்துார்; முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயிலில் கருவறை பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
முதுகுளத்துார் செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ளது. தற்போது புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயில் கருவறை உட்பட கோயிலை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு யாகசாலை பூஜை, பூர்ணாஹீதி, கோபூஜை நடந்தது. செல்லி அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலச புனிதநீர் அபிஷேகம் நடந்தது. சுவாமி சிலைகள் புதிதாக கட்டப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு தினந்தோறும் உற்ஸவர் செல்லி அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெறும். நிகழ்ச்சியில் முதுகுளத்துார், செல்வநாயகபுரம், மு.துாரிச கிராம மக்கள் கலந்து கொண்டனர்.