/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரண்டாவது திருமணம் கேட்டு தந்தையை கொன்ற மகன்
/
இரண்டாவது திருமணம் கேட்டு தந்தையை கொன்ற மகன்
ADDED : அக் 03, 2024 02:28 AM

சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே எம்.கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேலுச்சாமி, 75. இவரது இரு மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணமாகி விட்டது.
சில ஆண்டுகளுக்கு முன், வேலுச்சாமியின் மகன் வில்வ செல்வம், 35, என்பவரது மனைவி இறந்துவிட்டார். குழந்தைகள் கிடையாது.
கேரளா சென்று கூலி வேலை பார்த்து வந்த வில்வசெல்வம், தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க கோரி, தந்தையிடம் பலமுறை தகராறு செய்தார்.
நேற்று காலை 9:00 மணிக்கு தந்தை, மகனுக்கு தகராறு ஏற்பட்டது. தந்தையை கீழே தள்ளி, அரிவாளால் அவரது கழுத்தை அறுத்து, வில்வசெல்வம் கொலை செய்தார். சாயல்குடி போலீசார் வில்வசெல்வத்தை கைது செய்தனர்.
போதையில் தகராறு
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் ஒன்றியம், காட்டூர் ஊராட்சி, திருமலை நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி, 65, விவசாயி. மனைவி சுப்புலட்சுமி, 60. நேற்று மது போதையில் இருந்த கந்தசாமி, சாப்பாடு சரியில்லை என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதை மகன் மகேஷ், 38, கண்டித்ததால், அரிவாளை எடுத்து மகேஷை வெட்டி விடுவதாக கந்தசாமி மிரட்டினார்.
மகேஷ் மற்றொரு அரிவாளை எடுத்து கந்தசாமியை தலை, கழுத்து என பல இடங்களில் வெட்டினார். அருகில் இருந்தவர்கள், கந்தசாமியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.